தெற்காசிய கால்பந்தாட்ட 4ஆம் நாள் போட்டிகள் சமநிலையில்


தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினுடைய சுற்றுத்தொடரின் 4ஆம் நாள் போட்டிகள் இரண்டும் சமநிலையில் முடிவடைந்தன. இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியும் பாகிஸ்தான், நேபாள அணிகளுக்கிடையிலான போட்டியுமே சமநிலையில் நிறைவடைந்திருந்தன.

பங்களாதேஷ், இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் முதற்பாதியில் இரு அணிகளும் கோலொதனையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லை. 80ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் அணியின் அரிகுர் ரஹ்மான் மிஸூ கோலொன்றைப் பெற்றுக்கொடுத்து பங்களாதேஷ் அணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும் போட்டியின் இறுதி நேரத்தில் இந்திய அணி சார்பாக கோலொன்று சுனில் செற்ரியால் அடிக்கப்பட்டதால் போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

நேபாள அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியின் 13ஆவது நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் ஹசன் பஷிர் கோலைப் பெற்றுக்கொடுக்க, பாகிஸ்தான் அணி முதற்பாதி முழுவதும் 1 - 0 என்ற முன்னிலையைப் பெற்றிருந்தது. ஆனால் போட்டியின் இறுதி நிமிடத்தில் நேபாளத்தின் பிமல் கார்ட்டி மகர் கோலொன்றைப் பெற்றுக்கொடுக்க, இப்போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.